“இனிமேல் நான் பயப்படமாட்டேன்”

“இதுதான் நான் முதல் முறையாக மட்டக்களப்பை காண்பது…….உண்மையாக நான் வீட்டை விட்டு வெளியே வந்ததே இதுதான் முதல் தடவையாகும்.” இவ்வாறு கூறியது வேறு யாருமல்ல.  புஸ்பராணிஇ 30 வயது மட்டக்களப்பிலுள்ள காந்தி பார்க்கில் நடன நிகழ்ச்சிக்காக  அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். வரும் வழியெல்லாம் அவர்; தமது மூக்கை மினி வேனின் கண்ணாடியில் அழுத்திய படி யன்னலூடாக எல்லாவற்றையும் விடாமல் பார்த்துக்கொண்டு வந்தது முடிந்தளவு தன்னால் பார்க்கக் கூடிய விடயங்களையெல்லாம பார்த்து விடவேண்டும் என்னும்  ஆர்வம் காணப்பட்டது. “நான் அழகாக இருக்கின்றேனா? என்று ஏளையுடிடைவைல குழுவின்

அங்கத்தவரான ஹெலனாவிடம் கேட்டபடி தமது ஆடைகளைச் சரி செய்தபடியே வாகனத்திலிருந்து இறங்கினார். ஸ்ரீலங்காவில் ஏளையுடிடைவைல வேலை செய்த காலப்பகுதியில்  தெரிந்து கொண்ட பல மாற்றுத்திறனாளிகளின் கதைகளுள் ஒன்றாகவே புஷ்பராணியின் கதையும் இருந்தது.  சிறிய உடல்வாகும் காலை விந்தி விந்தி நடப்பவராகவுமிருந்தார்.  அவர் எமது நடனப் பயிற்சிப் பட்டறைகளுக்கு வந்த போது ஆரம்ப காலங்களில் பயந்த சுபாவமுள்ளவராக,பாதுகாப்பின்மையை உணர்பவராகவும்,பயிற்சிப்பட்டறை நடைபெறும் நேரங்களில் யாருடனும் கலந்து கொள்ள விருப்பமில்லாதவராகவும் காணப்பட்டார்.  ஏளையுடிடைவ குழுவினர் மீதும் நடன நிகழ்வில் பங்கு பற்றிய ஏனையோர் மீதும் அவருக்கு நம்பிக்கை வர சிறிது காலம் பிடித்தது.  முன்பெல்லாம் பொது இடங்களில் வைத்து அவரைத் தொடுபவர்கள் அவரது சிறிய உடலமைப்பை கருத்திற் கொண்டே அவ்வாறு செய்தார்கள்.  ஆனால் இச்செய்கை அவரை மேலும் பலவீனப்படுத்தியது.  மற்றவர் கவனத்தைத் திருப்பும் அவரது உடல் அமைப்பின் நிமித்தம் மக்கள் மத்தியில் பிரசன்னமாவதற்கு மிகவும் அசௌகரியப்பட்டார்.  இருப்பினும் நடன அமைப்பாளர்களான கெர்டா கொனிக் அவர்களும் மகேஷ் உமாகிலிய அவர்களும் உற்சாகப்படுத்திய விதத்தில் படிப்படியாக பொது இடத்தில் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக முன்வந்து தனது திறமையை வெளிப்படுத்தினார். “இவ்வளவு பேருக்கு முன்னால் நடனம் ஆடுவேன் என்று நான் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.” பின்னர் ஒரு உரையாடலின் போது அவர் இவ்வாறு கூறினார்.  “முன்பெல்லாம் என்னைப்பார்ப்பவர்கள் முதுகின் பின் இகழ்ச்சியாகவே கதைத்தனர்.  அப்போதெல்லாம் உலகத்தின் கண்ணில் படாமல் எங்காவது ஓடி ஒளிய வேண்டுமெனவே நினைப்பேன்.  இப்போது எனக்கு அந்த பயம் இல்லை. “இனிமேல் நான் பயப்படமாட்டேன்”

கடந்த காலத்தின் துயரங்களினின்று மீண்டு வெற்றி கொள்ளல்

மட்டக்களப்ப்pல்  தமது திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது ஏளையுடிடைவைல நிறுவனத்திற்கு பெரிய சவாலாக இருந்தது. – கடந்த காலத்தில் இருந்த முரண்பாடுகள் இரண்டு சமூகங்களுக்கிடையிலும் காயத்தினையும் ஆழமான வடுக்களையும் விட்டுச்சென்றிருந்தன. ஏளையுடிடைவைல  நிறுவனத்தின் சிங்கள நடனக்குழு அங்கத்தவர் முதன்முறையாக தமிழர்களை மாத்திரம் கொண்ட நடனக்குழுவினரிடம் சேர்ந்து நடனம் ஆட முற்பட்ட போது அவர்களிடம் ஏற்பட்ட பரபரப்பையும் அவர்களின் உணர்வுகளையும் கண்டு கொண்டனர்;. ஆரம்ப நாட்களில் கலப்பு நடன பயிற்சிப்பட்டறைகளின் போது நம்பிக்கையற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் பங்கேற்பாளர்கள் தமக்குள் வெகுநேரம் கலந்துரையாடினர்.  சிலருக்கு இந்த சு10ழ்நிலையை அமைதியாக கையாள அதிக  நேரம் தேவைப்பட்டது.  ஆனால் தொடர்ந்து நடன அமைப்பாளர்களாகிய கெர்டா கொனிக் அவர்களதும் மகேஷ் உமாகெலிய அவர்களினதும் முயற்சியினால் தமது பயிற்சிப்பட்டறையில் கலந்துரையாடலுக்கு கூடிய நேரம் ஒதுக்கியதன் மூலம் இந்த நிலை படிப்படியாக மாறியது. அதைவிட உணவு தங்குமிடம் என்பவற்றைப் ஏளையுடிடைவைல குழுவினருடன் பகிர்ந்து கொண்டதன் மூலமும் அவர்களின் எண்ணத்தை மாற்ற தூண்டுகோலாக இருந்தது.

VisAbility - Mixed-abled Dance Workshop - 1

பங்கேற்றவர்களுள் அநேகம் பேர் தாம் இதற்கு முன்னர் ஒரு சிங்களவரிடம்கூட மனம் விட்டுக் கதைத்ததில்லை என்றும்இ அமைதியான முறையில் அவர்களுடன் கதைத்துப் பொழுது போக்கியதில்லை எனவும் கூறினர்;.  அவர்களுள் சிலர் போருடன் தொடர்புபட்டு  சிங்களவர் பற்றிய கதைகளைக்கேட்டு அவ்வாறான எண்ணங்களையே ஞாபகத்தில் வைத்திருந்ததுஇ  ஸ்ரீலங்காவின் சமூகத்தினரிடையே காணப்பட்ட பிளவை காட்டியது.  வேறு சிலர் தொடர்பு சாதனங்கள் மூலம் தமது திறமையை வெளிப்படுத்தும் போது ஏற்படக்கூடிய  விளைவுகளைப்பற்றி; பற்றி உணர்ந்தனர். மேலும் தமக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த  துரதிருஷ்டமான நிலைஇ தமக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகள்      பற்றிய உணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டன.  தாம் சிங்களவர்களை விட  குறைந்தளவு உதவிகளையே அரசாங்கத்திடமிருந்து  பெறுவதாக (பண உதவிஇ வேறு வசதிகள்) தமிழ் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கொணடிருந்தனர்.  ஆயினும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கான இணைப்பாளர் ஹெலனா மாரம்பியோ அவர்களாலும் சட்ட ஆலோசகர் நிர்மா கருணரத்ன அவர்களாலும் முன்னர்; ஆய்வு செய்த பிரதேசங்களில் அநுராதபுரம்இ பொலன்னறுவைஇ அம்பாரை); இருந்து பெறப்பட்ட விபரங்களைக் கொண்டு பங்கு பற்றியவர்களின் தப்பபிப்பிராயத்தினை போக்கக் கூடியதாக இருந்தது.

“நான் இங்கு கற்றுக் கொள்ளக் கூடியது என்ன?

கலப்பு நடன பயிற்சிப்பட்டறை சிறிய குழுவாகக் காணப்பட்டாலும் இதனைக் கையாள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.  வௌ;வேறு இனங்களுக்கிடையேயான பொதுவான முரண்பாடுகளுடன் சமூகத்தினால் இதுகாலவரை ஒதுக்கப்பட்டிருந்த பங்கேற்பாளர்கள் தமது ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து வெளியே வரஇ சவால்களுக்கு முகம் கொடுக்க பெரிதும் போராடினர்.கலப்பு நடனக்குழுவினருடன் சேர்ந்து கொள்ளவும் நிகழ்வுகளில் பங்கேற்பதுமான வித்தியாசமான பலப்படுத்தும் அணுகுமுறையுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களுக்கு போதியளவு நேரம் தேவைப்பட்டது.

VisAbility - Mixed-abled Dance Workshop - 2

இதற்குச் சிறந்த உதாரணமாக முதலாவது நாள் பயிற்சிப்பட்டறை முடிந்த பின்னர் “என்னால் இங.கு என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்ட சுதீஸ்வரனைச் சொல்லலாம்.  அறையின் ஒரு மூலையில் இருந்து கொண்டு நாள் முழுவதும் நடனக் குழுவை அவதானித்த படியே இருந்தார்.

நடன அமைப்பாளர்களாலும்இ இரு வேறு நடன உதவியாளர்களாலும் எவ்வளவோ முயன்றும் அவர் நடனத்தில் பங்கேற்க முன் வரவில்லை.  சில மணி  நேரங்கள் சென்ற பின்னர்தான் அவர் தமது கூட்டிலிருந்து வெளியே வந்தார்.- அவரது முகபாவனை நட்புடன் காணப்பட்டது.    அவர் மெதுவாக புன்னகைத்ததுடன் நடனக்குழுவுடன் தம்மை  இணைத்துக் கொண்டார்;.  அவர் கோபக் குணத்திலிருந்து கனிவான நிலைக்கு தன்னை  மாற்றிக்கொண்டார்.  ஆரம்பத்தில் அவருக்கிருந்ந சகல குறைபாடுகளையும் களைந்து மாற்றுத்திறனாளிகளுள் சிறந்த ஓரு நடனக்காரராக அவர் விளங்கினார். ஏளையுடிடைவைல நிறுவனம்   சுதீஸ்வரனுடானான நேர்காணல் ஒன்றின் போது அவருடைய கதையை அறிந்து கொண்டது.  அவர் 9 வயதாக இருந்த போது ஒரு விபத்தில் தனது கையை இழந்தார். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் வைத்தியர்கள் அவரை நல்ல முறையில் சிகிச்கை செய்து வெற்றி கண்டிருப்பர்.  25 வயது இளைஞரான பின்னரும் கூடஇ தமது நிலையை ஏற்றுக்கொள்ள இவர் தயங்குகின்றார்.  இவ்வாறான பல கடினமான செயற்பாடுகள் இருந்தும் கூட இப்பயிற்சிப்பட்டறையின் பின்னர் சுதீஸ்வரன் தான் மிகவும் பலமுள்ளவர் எனவும் நேர்ச் சிந்தனையாளர் எனவும்  ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.

“இவ்வாறான காட்சியை  இதற்கு முன்பு நான் ஒரு போதும் கண்டதில்லை”

மட்டக்களப்பின் வாவிக்கரையின் ஓரமாக இருந்த “காந்திப் பூங்காவில் நடாத்தப்பட்ட நடன நிகழ்வு வெற்றகரமானதாக காணப்பட்டது.  சில பங்கேற்பாளர்;களினால் வேறுபட்ட நடன முறைகள் கலைநடனங்கள் புகுத்தப்பட்டன்.

VisAbility - Mixed-abled Dance Workshop - 3

பார்வையாளர்கள் உறுதியான தன்னம்பிக்கையுடன் கூடிய நடன அசைவுகளையிட்டு ; பெரிதும் கவரப்பட்டனர். “இவ்வாறான காட்சியை  இதற்கு முன்பு நான் ஒரு போதும் கண்டதில்லை” என்று ஒரு பெண்மணி தனது வியப்பை வெளிப்படுத்தினார்.  இன்னுமொரு பெண்மணி தனது மாற்றுத்திறனாளியாகவுள்ள மகனும் இந் நிகழ்வுகளில் பங்கு கொள்ளலாமா எனக் கேட்டார். மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளியல்லாதவர்களும்இ எவ்விதத் தடையுமின்றிஇ அடக்குதலின்றி சுதந்திரமாக  நிகழ்வுகளில் பங்கேற்றமை அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும்.  மேலும் வீதிப் போக்குவரத்திற்கு அப்போது பொறுப்பயிருந்த போலிஸ் அதிகாரிஇ  மாற்றுத்திறனாளிகளிடையே உள்;ள உண்மையான திறமைகளை ; சமூகத்த்pற்கு மேலும் வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதை வலியுறுத்தினார்.  நுடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுத்தும் பின்னர் நடன அமைப்பாளர்களைப் பேட்டியும் எடுத்தனர்.

இணக்கமான சிந்தனை

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை பற்றி நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் எழுபதிற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பற்றினர். ஏளையுடிடைவைல நிறுவனம்  முன்பு பயிற்சி நடாத்திய இடங்களில் செய்தது போலவே நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட முன்னர் மாற்றுத்திறனாளிகளுகளுக்காக உள்ள உரிமைகள் பற்றியும்இ எவ்வளவு தூரம் அவர்கள் அவை பற்றித் தெரிந்துள்ளார்கள் என்பது பற்றியும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கம் வழங்கும் உதவகள்இ வசதிகள் பற்றி அவர்களுக்குள்ள அறிவு பற்றியும் ஆய்வு ஒன்றினை செய்தனர்.

VisAbility - Human Rights Workshop

இப்பயிற்சிப்பட்டறையில் சகலரும் கலந்த ஒரு குழுவாகக் காணப்பட்டமையினால் (அதாவது மாற்றுத்திறனாளிகள்இ குடும்ப அங்கத்தவர் சமூக நலன்புரி அதிகாரிகள்இ அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் போன்றோர்) மாற்றுத்திறனாளிகளை நோக்கிய சமூகத்தின் நடைமுறைகளும்இ மனோபாவமும்இ போன்ற  விடயங்கள் பயிற்சிப்பட்டறையில் கலந்துரையாடப்பட்டன.  சமூகமளித்திருந்தவர்கள் நடைமுறைச்சாத்தியமானஇ அதாவது சக்கர நாற்காலியில் இருப்பவர்களை கையாளுவது அல்லது வித்தியாசமான உடலமைப்புக்கொண்டவர்களை அணுகுவது போன்ற விடயங்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கினர்.  இப்பயிற்சிப்பட்டறை இணக்கமான சிந்தனையைத் தூண்டவும் புதிய சு10ழலை  தயக்கமும்  பயமுமின்றி ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.